ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்காக முப்படையினரையும், பொலிஸாரையும் வைத்து காலிமுகத்திடலில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஜனநாயகவழிப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின் தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் “சர்வகட்சி ஒன்றிணைவு” என்ற தொணிப்பொருளில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தனது கருத்தை தெரிவிக்கையிலேயெ மேற்கண்டவாறு கூறினார்.