அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்பு கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் அவர்கள் இருவருக்கும், கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையான பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.