இலங்கையின் தேசிய அணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவான முதலாவது குத்துச் சண்டை வீரரான விற்றலி நிக்லஸ் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள “பேர்மிங்ஹாம் 2022” பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதன் முறையாக கலந்துகொள்ளவுள்ளார்.
விற்றலி நிக்லஸ் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற தனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், இப் போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுப்பதே தனது இலட்சியம் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்க விழாவோடு ஆரம்பமாகவுள்ள “பேர்மிங்ஹாம் – 2022 பொதுநலவாய விளையாட்டு விழா” நிகழ்வில் 22 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்குபற்ற 72 நாடுகளை சேர்ந்த 50,000 விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் ஈட்டி எறிதலில் புகழ் பெற்ற கிறிஸ்ரினா வின் சகோதரனான நிக்லஸ் ஶ்ரீலங்கா இராணுவத்தில் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
