புகையிரதக் கட்டணங்கள் நாளை (22) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக தொடர் நட்டகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் தொடர்ந்தும் புகையிரத சேவையை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையிலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரதக் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலாம், இரண்டாம் வகுப்பு கட்டணங்கள் ரூபா 50/= ஆகவும், மூன்றாம் வகுப்பு கட்டணம் ரூபா 20/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.