இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரம சிங்க இன்று பதவி ஏஏற்றுள்ள நிலையில் நாளை முதல் எதிர் வரும் 5 நாட்களுக்குள் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் ராஜபக்ஷேகளை திருப்திப்படுத்தும் வகையில் பல அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக நாமல் ராஜபக்ஷ வுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன், அசாத் சாலி ஆகியோரும் உள்ளடங்குவர் எனவும் தெரிய வருகிறது.