தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைந்தது 5 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் 14க்கும் மேற்பட்ட வாக்குகளும், ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கப்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு தெரிவானதுடன் நாட்டுக்குள் புதிய எதிர்பார்ப்பு உருவாகும் எனவும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.