காலிமுகத்திடலில் கூடியிருந்த “கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள் மீது இராணூவத்தினரால் ஈவிரக்கமற்ற தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை 3:00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் ஈவிரக்கமற்ற தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும், பலர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல சட்டத்தரணிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள சாலிய பீரிஸ் இத்தகைய செயற்பாட்டை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், தேவையற்ற பலப்பிரயோகம் எந்தவகையிலும் இந்த நாட்டிற்கு உகந்ததாக அமையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விபரங்களையும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் வெளியிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி: நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட போராட்டக்காரர்கள்: பலர் கைது!