Home உலக செய்திகள் இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் (ஜனாதிபதி) ஆகும் “திரெளபதி முர்மு”:

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் (ஜனாதிபதி) ஆகும் “திரெளபதி முர்மு”:

15
0

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த “திரெளபதி முர்மு” முன்னிலையில் உள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினத் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்ணருமான “திரெளபதி முர்மு” இரண்டு இலட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பிறந்த “திரெளபதி முர்மு” ராமதேவி பெண்கள் பல்கலைக்கழகத்தில் (Rama Devi Women’s University) தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து ஆசிரியராக பணியாற்றிவந்தார்.

1997 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய “திரெளபதி முர்மு” கவுன்சிலராக , அமைச்சராக, என படிப்படியாக வளர்ச்சி பெற்று அரசியலில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.