இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப்பெற்று இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக “ரணில் விக்கிரமசிங்க” தெரிவாகியுள்ளார்.
ராஜபக்ஷேக்களின் சர்வாதிகார அரசாங்கத்தை அகற்ற கடந்த 100 நாட்களாக மக்கள் தொடர்ந்துவந்த போராட்டத்தை கருத்தில் கொள்ளாது மீண்டும் ராஜபக்ஷேக்களின் கூட்டணி ஆதரவில் மக்களால் வெறுக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியிருப்பது இலங்கையிந் நிலைமையை மிக மோசமடைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பால் நாட்டில் குறிப்பாக கொழும்பில் போராட்டங்கள் வெடிக்கலாம் எனவும், அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க ரணில் முனையும் போது பாரிய கலவரங்களும், உயிர் சேதங்களும் ஏற்படாலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் இவருக்கு 134 எனும் பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன.இந்த வாக்கெடுப்பில், சஜித் அணியின் ஆதரவைப் பெற்ற வேட்பாளரான டளஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.