ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் தனது வெற்றியை உறுதி செய்யும் பேரம்பேசலின் இறுதிக்கட்டமாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார் .
இதன்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் தாம் உறுதி செய்வதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.