ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் SJB தலைவருமான சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் நான் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். @sjbsrilanka மற்றும் எங்கள் கூட்டணி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி பங்காளிகள் @DullasOfficial வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் இன்று காலை 10.00 மணிக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சி மற்றும் SJB தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தேர்தலுக்கு முன்னதாக விலகிக்கொண்டுள்ளதோடு, இன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீர்மானித்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.