Home செய்திகள் சஜித் அணியின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ள ரணில்!

சஜித் அணியின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ள ரணில்!

15
0

ஜனாதிபதிக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து திடீரென சஜித் பிரேமதாச விலகியமையால் ரணில் விக்கிரமசிங்க பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்‌ஷேக்களுடனான ரணிலின் தந்திரோபாய பேரம் பேசுதலின் விளைவாக ராஜபக்‌ஷேக்கள் உள்ளடங்கிய சீறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் ரணிலுக்கே தமது ஆதரவு என தெரிவித்திருந்தது.

ஆனால் அக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அது தமது கட்சியின் ஒட்ட்மொத்த முடிவு இல்லை எனவும் தெரிவித்து வந்திருந்தார்.

இந்த நிலையில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவ்ரும், ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருப்பவருமான டளஸ் அழகப்பெருமவிற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர் ஆதரவு வழங்கி வரும் நிலையில், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அப்போட்டியில் இருந்து விலகி தனது கட்சியின் ஆதரவையும் டளஸ் அழகப்பெருமவிற்கு வழங்கியமையால் நாளை நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்று டளஸ் வெற்றி பெற வாய்ப்புக்கள் ஆதிகம் என்பதை ஊகித்தே பெரும் அதிர்ச்சியில் ரணில் விக்கிரமசிங்க உறைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,.