ஜனாதிபதி பதவியை தம்வசப்படுத்த ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சதியில் ஈடுபட்டுள்ளதாக காலாநிதி தயான் ஜயத்திலக தெரிவித்துள்ளார்.
அச் சதியை வெற்றி கொள்ளாத பட்சத்தில் ராஜபக்ஷேக்களை ஆட்சியில் இருந்து அகற்ற இடம்பெற்ற போராட்டம் தோல்வியடைந்துவிட்டதாகவே கருத முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள தயான் ஜயத்திலக, இந் நிலையில் ரணிலால் முன்னெடுக்கப்பட்டுவரும் சதியை முறியடித்து அவரை வெளியேற்றலாம் என்பது தொடர்பில் எதிர்க் கட்சிகளும், ராஜபக்ஷேக்களுக்கு எதிரானவர்களும் ஒன்றுபட்டு சிந்தித்து தீர்க்கமான னிலைப்பாட்டை எட்டவேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.