Home தாயக செய்திகள் இன்று (18) முதல் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம்!

இன்று (18) முதல் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம்!

23
0

நாடளாவிய ரீதியில் இன்று (18-07-2022) முதல் அவசரகாலச்சட்டம் அமுலாகும் வரையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை பதில் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாகவும், நாட்டில் அமைதியை நிலை நாட்டவும், மக்களின் அத்தியாவசிய தேவைக்கான சேவைகள் மற்றும் வினியோகங்களை மேற்கொள்ளவும் இது (அவசரகாலச் சட்டம்) உசிதமானதாக இருக்கும் என தான் (ரணில்) கருதுவதாக அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.