Home தாயக செய்திகள் மீண்டும் இலங்கை திரும்புகிறார் கோட்டபாய: பீரீஸ் தகவல்

மீண்டும் இலங்கை திரும்புகிறார் கோட்டபாய: பீரீஸ் தகவல்

77
0

மக்கள் தன்னெழுச்சி எதிர்ப்புப் போராட்டத்தால் நாட்டைவிட்டுத் தப்பியோடி பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:-

“கோட்டாபய ராஜபக்ச ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளைப் பெறவுள்ளார். அதன்படி, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்புப் படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் அவர் மற்றும் அவரது மனைவிக்குக் கிடைக்கும்.

தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபாய ராஜபக்சவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” – என்றார்