ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை தமது கட்சி இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும், ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னரே யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கோட்டபாய பதவி விலகியதும் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமிக்க முயற்சிகள் நடந்தால் அதனை எதிர்க்க வேண்டும் எனவும், ஒரு நாள் மூட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக்ல இருக்க அனுமதிக்கக்கூடாது எனவும் கொழும்பில் போராட்டக்காரர்களுடனான சந்திப்பில் சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.