Home தாயக செய்திகள் புதிய ஜனாதிபதி தெரிவை முன்னிட்டு பாராளுமன்ற வளாகம் முப்படையினரின் கட்டுப்பாட்டில்:

புதிய ஜனாதிபதி தெரிவை முன்னிட்டு பாராளுமன்ற வளாகம் முப்படையினரின் கட்டுப்பாட்டில்:

63
0

புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யும் காலப்பகுதியான இம் மாதம் 20 ஆம் திகதி வரையான 5 நாட்களுக்கும் பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்துகொள்வதற்கான வாக்களிப்பு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெற இருக்கும் நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் தடுக்கும் முகமாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் பாராளுமன்ற பிரதானிகளின் கோரிக்கைக்கமைய முப்படைகளையும் உள்ளடக்கி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள நீரேரியில் கடற்படையினரின் விசைப்படகுகள் கண்காணிப்பு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி தெரிவை எதிர்கொள்ள மூன்றிற்கும் சஜித், அழகப்பெரும மற்றும் ரணில் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும் சரத் பொன்சேகா மற்றும் அனுரகுமார திஸனாயக்க ஆகியோரும் தாமும் போட்டொயிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இன்று பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.