Home செய்திகள் பதில் ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலரும் இராணூவ வைத்தியசாலைக்கு விஜயம்:

பதில் ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலரும் இராணூவ வைத்தியசாலைக்கு விஜயம்:

63
0

பதில் ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க கொழும்பு இராணூவ வைத்தியசாலைக்கு வியயம் மேற்கொண்டிருந்தார்.

நேற்றைய (15) தினம் பதில் ஜனாதிபதியாக பதவியேற்று சில மணித்தியாளங்களில் குறித்த விஜயத்தை மெற்கொண்ட ரணில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு காயமுற்றதாக சொல்லப்படும் இரு இராணுவத்தினரையுமே வைத்தியசாலையில் பார்வையிட்டு கலந்துரியாடியுள்ளார்.

பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ணவும் காயமடைந்த இராணூவத்தினரை குறித்த வைத்தியசாலையில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தை தம்வசப்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக இந்த விஜயத்தை ரணில் மேற்கொண்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.