Home செய்திகள் இலங்கை சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய தூதர் கோபால் பாக்லே:

இலங்கை சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய தூதர் கோபால் பாக்லே:

82
0

கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியை ராஜினாமா செய்த பின், இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று முறைப்படி பதவியேற்றிருந்த நிலையில், இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

“இந்திய தூதர் இன்று காலை சபாநாயகரை சந்தித்தார். குறிப்பாக இந்த முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கை பாராட்டினார். இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.