1981 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் நான்காவது உறுப்புரைக்கு அமைய பாரளுமன்றம் கலைக்கப்படாமலும், ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் நிலவும் சூழ்னிலையிலும் இன்று சபாநாயகரின் சிறப்பு அழைப்பின் பேரில் பாரளுமன்றம் கூடியது.
இன்று (16) காலை 10:00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய பாரளுமன்றத்தில் எடுக்கப்பட்ட, மற்றும் அறிவிக்கப்பட்ட முடிவுகளாவன;
இலங்கை அரசியலமைப்பின் 38 (1) உறுப்புரிமையின் பிரகாரம் கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்ய வேட்பு மனுக்கள் 19 ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்டு 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடாத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
அரசியலமைப்பின் 6வது உறுப்புரைமை சட்டத்தின் பிரகாரம் வேட்பு அம்னுக்களை சமர்ப்பித்தல் முறைமை தொடர்பில் செயலாளர் நாயகம் சபைக்கு தெளிவுபடுத்தினார்.
அதற்கமைய எதிர் வரும் செவ்வாய்க் கிழமை (19) காலை 10:00 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும். அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். இதன் போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் அனைவரும் கட்டாயம் னேரில் சமூகமளிக்க வேண்டும்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு அரசியல் அமைப்பின் 92வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மைகளை சகல வேட்பாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.