முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் சிலரால் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி நீதிமன்றத்தின் அனுமதியின்றி இவர்களுக்கு வெளிநாடு செல்ல முடியாது என்று ஐவரடங்கிய நீதியரசர்களினால் உத்தரவிடப்பட்டுள்ளது.