Home செய்திகள் பாராளுமன்றில் – ஜூலை 20 இல் புதிய ஜனாதிபதி தெரிவு.

பாராளுமன்றில் – ஜூலை 20 இல் புதிய ஜனாதிபதி தெரிவு.

54
0

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ விலகியுள்ள நிலையில் அந்தப் பதவிக்கு பாராளுமன்றத்தில் இருந்து ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை 20 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து 19 ஆம் திகதி ஜனாதிபதியாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பெறுவதற்கும் 20 ஆம் திகதி சபையிர் வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.