மக்கள் போராட்டத்தை கலவரமாக மாற்றியமைக்க ஒருதரப்பினர் முயற்சித்து வருவதாகவும், இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள். ஜனநாயக கோட்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் பதில் ஜனாதிபதி ரணில் “நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து உடனடியாக பதவி விலக வேண்டும்” இல்லாவிடின் போராட்டம் தொடரவும், மேலும் தீவிரமடையவுமே அது வழிவகுக்கும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரச தலைவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடியான சூழ்நிலையை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்கொண்டுள்ளார். மக்களின் கடுமையான போராட்டத்தினால் நாட்டை விட்டே தப்பி ஓடியுள்ளார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்கஷ. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த பிரதான வெற்றியாகும். என்றார்.