Home செய்திகள் பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் – பொலிஸாரின் தாக்குதல்களில் 42 பேர் காயம்!

பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் – பொலிஸாரின் தாக்குதல்களில் 42 பேர் காயம்!

61
0

பாராளுமன்றப் பகுதியில் கூடியிருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 42 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த இரவு முதல் பாராளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில் இன்று அதிகாலை பாரளுமன்றத்தை நெருங்கிய போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை மற்றும் நிர்த்தாரைப் பிரயோகங்கள் காரணமாகவே போராட்டக்காரர்களில் 42 பேர் காயமுற்றுள்ளனர்.

நேற்றைய தினமும் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட மக்கள் (போராட்டக்காரர்கள்) மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை மற்றும் நிர்த்தாரைப் பிரயோகங்கள் காரணமாக 39 பேர் காயமுற்றிருந்த நிலையில் அதில் ஒருவர் பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலுக்குள் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.