Home செய்திகள் ஒரு மாதத்திற்கு பின்னர் வவுனியாவில் லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம்:

ஒரு மாதத்திற்கு பின்னர் வவுனியாவில் லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம்:

84
0

ஒரு மாதத்திற்கு பின்னர் வவுனியாவில் 1000 பேருக்கு சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு நேற்று (13) வழங்கப்பட்டது.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து குறித்த சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.

லிற்றோ நிறுவனத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து அங்கு வருகை தந்திருந்த மக்கள் 1000 பேருக்கு சீரான முறையில் எந்தவித குழப்பங்களுமின்றி இலக்க சிட்டைகளை வழங்கி, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மின்சார பட்டியல்கள் பதிவு செய்யப்பட்டு சமையல் எரிவாயு 1000 பேருக்கு விநியோகிக்கப்பட்டது.