Home செய்திகள் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்:

அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்:

61
0

நாட்டில் அமைதியை  ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம்  ஆகியவற்றில் இருந்து  வெளியேறுவதற்கு  போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் கடந்த    9 ஆம் திகதி    இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் விளைவாக   போராட்டக்காரர்கள்  ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம்  அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம்  ஆகிய பகுதிகள் கையகப்படுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, காலி முகத்திடல் பகுதியில் இன்று  முற்பகல் இடம்பெற்ற  ஊடக  சந்திப்பில் தங்கள் வசமுள்ள ஜனாதிபதி மாளீகை, பிரதமர் அலுவலகம், மற்றும் அலரி  மாளிகை ஆகிய அரச கட்டிடங்களை  கையளிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனினும் ஜனாதிபதி செயலகத்தை தற்போது கையளிக்கப்போவதில்லை எனவும், மக்களின் கோரிக்கைக்கும், போரட்டத்திற்கும் மதிப்பளித்து ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய இன்று காலை முதல் குறித்த கட்டிடங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி வருகின்றனர். இன்று இரவுக்குள் முழுமையாக வெஈயேறிவிடுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.