Home தாயக செய்திகள் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டமும் – நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டமும் அமுல்:

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டமும் – நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டமும் அமுல்:

15
0

கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்ட நிலைமையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யவும், கலவரக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைது செய்யவும் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.