கொழும்பில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் இடம்பெற்ற நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலகலுடன் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
