Home உலக செய்திகள் பாதுகாப்பான இடம் கிடைக்காததால் பதவி விலக மறுக்கும் கோட்டபாய:

பாதுகாப்பான இடம் கிடைக்காததால் பதவி விலக மறுக்கும் கோட்டபாய:

91
0

இன்று (13) அதிகாலை கட்டுனாயக்காவிலிருந்து புறப்பட்டு மாலைதீவு சென்றடைந்த கோட்டபாய, அவரது மனைவி மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட்ட நால்வரையும் மாலைதீவு அரசாங்கம் தமது நாட்டிற்குள் ஏற்க மறுத்துள்ளதாகவும், தொடர்ந்தும் விமான நிலையத்திந் விசேட விருந்தினர் விடுதியில் குறித்த நால்வரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் அங்கிருந்து அரபு நாடு ஒன்றிற்கோ அல்லது சிங்கப்பூருக்கோ செல்வதற்கான முயற்சிகளில் தற்போது கோட்டபாய இறங்கியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அவரை பொறுப்பேற்று பாதுகாப்பு வழங்க இதுவரை எந்த நாடும் முன்வராத நிலையில் தான் தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என கோட்டபாய கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.