நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபருடன் இணைந்தவாறு வீடியோ மூலம் வெளியிட்டுள்ள குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு முப்படைகளின் தலைவர்களுடன் இணைந்து சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அக்கூட்டத்தை தொடர்ந்து எடுக்கப்படும் இறுதித் தீர்மானத்தை அறிவிக்குமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று மாலை பொதுமக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முப்படை மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தொடர்ந்தும் நடைபெறும் போராட்டங்களின் போது அரச் மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.