கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகி அது தொடர்பான ஆவணங்களை உத்தியோகபூர்வமாக என்னிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வாறு ஜனாதிபதிபதவி விலகல் நடைபெறவில்லை என்றால் தான் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் அரசியல் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வெளியிட்டுள்ளார்.