நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு உட்பட்டும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனுமே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைதீவு செல்ல தமது விமானத்தை வழங்கியதாக சிறீலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த விமானம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்தே புறப்பட்டு சென்றதாகவும், அதில் ஜனாதிபதியும் அவரது மனைவியும் இரு பாதுகாவலர்கள் உள்ளடங்கலாக நான்கு பேரை ஏறிச் சென்றதாகவும் சிறீலங்கா விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.