இன்று காலை முதல் போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள்ளாகி இருந்த பிரதமர் அலுவலகம் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வசமகியுள்ளது.
கொழும்பு – 7, பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தை மக்கள் நெருங்கவிடாமல் இராணுவத்தினரும், காவல்துறையினரும் பல தடைகளை போட்டும், தடுத்து மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அதனைக் கடந்து சென்று போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தம்வசப்படுத்தியுள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கு தமது கொடியையும் பறக்கவிட்டுள்ளனர்.
