
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்றூ அதிகாலை மாலைதீவை சென்றடைந்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ ஜெட் விமானம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி கோட்டபாயவும், அவரது மனைவியும், இரு மெய்ப்பாதுகாவலர்களுமாக நால்வர் இன்று மாலைதீவு நேரப்படி அதிகாலை 3:00 மணிக்கு மாலைதீவு தலைநகரை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷேக்கள் நாட்டைவிட்டு தப்பியோட அனுமதிக்கக் கூடாது என போராட்டக்காரர்கள் தொடர்ந்து கூறிவருவதோடு நேற்றைய தினம் பயணத்தடை விதிக்கக் கோரி நீதிமன்றில் மனுத் தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.
அமைதியான முறையில் ஆட்சிப் பொறுப்பை கையளிக்கப்போவதாக கால அவகாசம் சொன்ன கோட்டபாய அறிவித்த படி இன்று தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்காமலும் ஆட்சியை ஒப்படைக்காமலும் தப்பியோடியிருப்பதானது இலங்கையின் கள நிலவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பசில் ராஜபக்ஷவும் விமானம் மூலம் அமெரிக்கா சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.