யாழ்-மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியை மறித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்களே இவ்வாறு ஏ9 வீதியை மறித்து நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்ததால் அங்கு நீண்ட நாட்களாக காத்திருந்த பொது மக்கள் முதலில் வரிசையில் காத்திருந்த தமக்கு எரிபொருளை வழங்கிவிட்டு பின்னர் உங்கள் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் எனக் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி வழியான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்… மண்டை கழண்ட மகேசனால் தாம் படும் அவதி … என சலித்துக் கொண்டதோடு முன்னர் யாழ் அரசாங்க அதிபராக இருந்த திரு. வேதநாயகன் தற்போது இருந்திருந்தால் சரியான திட்டமிடலோடு செயற்பட்டிருப்பார் எனவும் தெரிவித்தனர்.
