சுமார் 67 மில்லியன் ரூபா பெறுமதியான 225 கிலோகிராம் கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரிடம் சிக்கியுள்ளது.
இலங்கை கடற்படையின் “கடல்வழி சட்டவிரோத குற்றத்தடுப்பு” பிரிவின் சிறப்பு அணி ஒன்று நேற்றைய தினம் (11) மன்னார் – தேவன்பிட்டியில் நடாத்திய தேடுதல் நடவடிக்கையிலேயே மீன் வலையால் மூடப்பட்டு 99 பொதிகளைக் கொண்ட 203 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இதே போன்று மன்னாரின் இன்னுமோர் பகுதியிலும் 5 பொதிகளைக் கொண்ட 22 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். இச் சம்பவங்களோடும் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவரை கடற்படையினர் கைது செய்துமுள்ளனர்.
இவ்விரு சம்பவங்களிலும் மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் உள்ளூர் பெறுமதி சுமார் 67 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.