
சிறீலங்கா கடற்படையின் துணைத் தளபதியாக “றியர் அட்மிரல் அனுரா ஏக்கனாயக்க” நியமிக்கப்பட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு சிறீலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட அனுரா ஏக்கனாயக்க, திருகோணமலையில் அமிந்துள்ள கடற்படை பயிற்சி முகாமில், கடற்படை மற்றும் கடல் சார் பயிற்சியை முடித்து 1989 ஆம் ஆண்டு “சப் லெப்ரினண்ட்” ஆக உயர்வு பெற்றார்.
அதன் பின்னர் கடற்படையின் தொழில்நுட்ப பயிற்சிக்காக இந்தியா சென்ற அனுரா ஏக்கனாயக்க வெந்துருத்தில் அமைந்துள்ள ” நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்ப் பள்ளி – ஐ.என்.எஸ்” இல் சிறப்பு தேர்ச்சி பெற்று நாடு திரும்பியிய பின் 1997 முதல் படிப்படியான பல கட்ட வளர்ச்சியடைந்து 2017ஆம் ஆண்டு “றியர் அட்மிரல்” ஆக பதவி உயர்வு பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.