சிறீலங்கா இராணுவத்தின் “கெமுனு வோஸ்ச்” படைப்பிரிவின் கேணல் தர அதிகாரி ஒருவர் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
நிக்கவேவ பகுதியில் அமைந்துள்ள “எயார் மொபைல் பயிற்சிக் கல்லூரி” யின் அதிகாரியாக பணியாற்றிவந்த கேணல் எம்.ஏ.டி.ஆர் மக்கள ஆர்.எஸ்.பி என்பவரே இவ்வாறு சாவடைந்தவராவர்.
நேற்றைய தினம் அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் சற்று நேரத்தின் பின் இருதய செயற்பாடு நின்றுவிட்டதாகவும் இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.
கேணல் எம்.ஏ.டி.ஆர் மக்கள வின் இறுதிச்சடங்குகள் நாளை (13) புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு பூரண இராணுவ மரியாதைகளுடன் “அட்டவில வத்த” வில் இடம்பெறும் எனவும் இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது.