ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் என போராட்டக்காரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
ஓடிவந்து பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், இரு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகியிருப்பார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே ஒரு நாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் என வலியுறுத்தியதோடு, போராட்டக்காரர்களின் கருத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துப்போகின்றது எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு தேசிய வாசிகசாலையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.