Home செய்திகள் தனது பதவி விலகலை பிரதமரிடம் மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி:

தனது பதவி விலகலை பிரதமரிடம் மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி:

64
0

தான் ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ஜூலை 13ஆம் திகதி, புதன்கிழமை இராஜினாமா செய்யவுள்ளதாக, தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, ஜூலை 09ஆம் திகதி மாலை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்திருந்தார்.

ஜூலை 09 மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தைத் தொடர்ந்து, கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்தின் பின்னர் அதில் எட்டப்பட்ட முடிவுகளை, சபாநாயகர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே, ஜனாதிபதி கோட்டாபய தமது பதவி விலகல் தொடர்பில் அறிவித்திருந்தார்.

அதற்கமைய பெளர்ணமி தினமான நாளை மறுதினம் (13) அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.