Home முக்கிய செய்திகள் என் வீடு தீக்கிரையாக ஹக்கீமே காரணம்: ரணில்

என் வீடு தீக்கிரையாக ஹக்கீமே காரணம்: ரணில்

67
0

தனது வீடு தீக்கிரையாவதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமே காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் “நீங்கள் இட்ட டுவிட்டர் பதிவினாலேயே என் வீடு தீக்கிரையாக்கப்பட்டதாக” ரணில் விக்கிரமசிங்க ரவூப் ஹக்கீமை கடுமையாக சாடியுள்ளார்.

இதையடுத்து கட்சிக் கூட்டத்தில் பெரும் வாய்த்தர்க்கமும் இடம்பெற்றுள்ளது.

நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் ஆற்றிய உரையின் போதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்ட விடையத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.