ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த போது கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 7 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகினர்.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாமை தொடர்பில், உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.