Home செய்திகள் இடைக்கால ஜனாதிபதியாக சஜித்தின் பெயரை முன்மொழிய ஐ.ம.ச யின் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஏகமனதாக தீர்மானம்:

இடைக்கால ஜனாதிபதியாக சஜித்தின் பெயரை முன்மொழிய ஐ.ம.ச யின் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஏகமனதாக தீர்மானம்:

62
0

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸாவின் பெயரை முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த பிரேரணையை சமர்ப்பித்தமையை, இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது பாரளுமன்றத்தில் 50 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றில் வெற்றி பெற 113 பாராளுமன்ற (அதாவது ஏனைய கட்சிகளை சார்ந்த 63) உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.