Home செய்திகள் அயல் நாடில் தஞ்சமைந்த கோட்டபாய: சபாநாயகர் தகவல்

அயல் நாடில் தஞ்சமைந்த கோட்டபாய: சபாநாயகர் தகவல்

23
0

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தற்போது அயல் நாடு ஒன்றி இருப்பதாகவும், புதன் கிழ்மை அன்று நாடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேயவர்த்தன சற்று முன் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்ட விடையத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து உலங்கு வாலூர்தி மூலம் உள்ளூர் நேரப்படி மாலை 3:30 மணியளவில் ஜனாதிபதி இரத்மலாண விமான நிலையத்தை வந்தடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்படும் செய்திகள் யாவும் சபாநாயகரால் மாத்திரம் வெளியிடப்படும் என இன்று காலை ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் ஜனாதிபதியின் அறிவிப்புகள், சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் அவரால் வெளியிடப்படுமென அறிவிக்கப்படும் எனவும், எனவே சபாநாயகரால் வெளியிடப்படும் அறிவிப்புகுள் மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என கருதுமாறு கேட்டுக் கொள்வதாக, ஜனாதிபதி அலுவலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.