பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ மூட்டியவர்கள் என்ற சந்தேககத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், குறித்த மூவரும், காலி, கல்கிஸ மற்றும் யாஎல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை பேச்சாளரும், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.