Home செய்திகள் இலங்கையில் தொடரும் பதவி விலகல்கள் – தம்மிக்க பெரேராவும் பதவி விலகினார்:

இலங்கையில் தொடரும் பதவி விலகல்கள் – தம்மிக்க பெரேராவும் பதவி விலகினார்:

67
0

இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அண்மையில் பரவியேற்றிருந்த தம்மிக்க பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மஹிந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராகவும், ஜனாதிபதி கோட்டாபாயவின் நம்பிக்கைகு உரியவருமான தம்மிக்க பெரேரா கோட்டபாய ராஜபக்‌ஷவின் ஆட்சியை காப்பாற்றும் முகமாக அவசர அவசரமாக பதவியேற்றுக்கொண்டிருந்த போதும், நாட்டு மக்களின் கடும் எதிர்பால் கோட்டபாயவினாலேயே ஜனாதிபதியாக இருக்கமுடியாதுள்ள சூழலில் தானும் தனது பதவி விலகலை இன்று அறிவித்துள்ளார்.

நேற்றைய (9) மக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்தால் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் அலரி மாளீகை ஆகியன போராட்டக்காரர்களின் வசம் வீழ்ந்த பின் இதுவரை 5 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.