இன்று (09) மு.ப. 8.00 மணியுடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச.) தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தாம் பணிக்கு செல்வதற்கு அவசியமான எரிபொருளை வழங்குமாறு கோரி அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், உரிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானித்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இன்றையதினம் இ.போ.ச. பஸ் சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.