Home செய்திகள் ராஜபக்‌ஷக்களை காப்பாற்றும் பிரதமரின் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை:

ராஜபக்‌ஷக்களை காப்பாற்றும் பிரதமரின் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை:

69
0

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவும், மக்கள் ஆணை இல்லாது பிரதமராகிய ரணிலும் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் போஓராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி கூட்டத்தில் எமது கட்சியான “ஐக்கிய மக்கள் சக்தி” கலந்துகொள்ளாது என அக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எமது அபிமானம் மிக்க தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஒரே இலக்கில் இந் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுபட்டிருக்கும் இத் தருணத்திலும், அந்த வெற்றியின் இலக்கு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் நிலையிலும், போலியான பிரதமரால் நடாத்தப்படும் வீண்கலந்துரையாடலால் இன்னுமொரு முறை ராஜபக்‌ஷக்கள் காப்பாற்றப்படுவதே நடக்கும். அத்தகையதொரு நிலைமைக்கு இனியும் இடமளிக்கக் கூடாது.

தன்னிச்சையான அடக்குமுறையான ஜனநாயக விரோத தற்போதைய அரசாங்கத்தின் முடிவு இப்போது கண்ணுக்கு தென்பட்டவண்ணம் உள்ள இவ் வேளையில் குதிரை ஓடிய பிறகு தொழுவத்தை மூடுவது போன்ற வெற்றுக் கலந்துரையாடல்களில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.