
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து கொழும்பை வந்தடைந்த மக்கள் வெள்ளம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை பல்முனைகளூடாக முன்னெடுத்துவரும் நிலையில் இன்று (9) கொழும்பு கோட்டை – ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.
ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் நெருங்கியதும் போராட்டம் தீவிரமடைய தொடங்கியது. பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த பொலீஸ், சிறப்பு அதிரடிப்படை, இராணூவம் என அனைத்தும் மக்கள் வெள்ளத்தாலும் , போராட்டக்காரர்களின் தீவிரத்தாலும் நிலைகுலைய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளீகையினுள் உள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்தில் இல்லை எனவும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

