கொழும்பில் மக்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீடித்து வரும் நெருக்கடிக்கு தீர்வுகாணும் முகமாகவும், மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்தும், தன் அழைப்பை ஏற்று கூட்டத்திற்கு வருகைதந்த கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று தாம் பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவிட தயார் என பிரதமர் ரணில் தெரிவித்துள்ள போதிலும் இதுவரை பிரதமர் உத்தியோகபூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சித்தலைவர்களுக்கு இடையிலான இன்றைய கலந்துரையாடலில் அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
